சென்னை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத சென்னை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களிலும் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட்டது.
இதனால், இந்த 27 மாவட்டங்களிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பதவிக்காலம் இந்தாண்டு ஜனவரி மாதம் முடிவடைந்தது. இதையடுத்து, இந்த உள்ளாட்சிகளின் நிர்வாகங்களை கவனிக்க தமிழக அரசு தனி அலுவலர்களை நியமித்தது. இந்த அலுவலர்களின் பதவிக்காலம் கடந்த 3-ம் தேதி முடிவடைந்த நிலையில், மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.