• Mon. Jul 7th, 2025

24×7 Live News

Apdin News

எண்ணெய் சருமமா? இதையெல்லாம் செய்யாதீர்கள்! – Vanakkam London

Byadmin

Jul 7, 2025


சருமப் பிரச்னைகள் ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் இருக்கக்கூடியதுதான். சிலருக்கு முகம் எப்போதும் எண்ணெய் வழிந்தாற்போலவே இருக்கும். அவர்களுக்கு ஆயில் சருமம் அல்லது எண்ணெய்ப் பசை சருமம் என்று கூறுகிறோம்.

எண்ணெய் சருமம் கொண்டவர்கள் மிகவும் கவனமாக தங்கள் சருமத்தைப் பாதுகாக்க வேண்டும். அவர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதற்கு அதிகமாக ஸ்க்ரப் செய்யவோ அல்லது பீலிங் (peeling) பேக் போடவோ கூடாது. இதனால் அதிக எண்ணெய்யை சரும செல்கள் வெளியேற்றும். அதனால் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே ஸ்க்ரப் அல்லது பீலிங் பேக் போட வேண்டும்.

சருமத்தில் எண்ணெய் பசை இல்லாமல் இருக்க நாள் ஒன்றுக்கு இருமுறை கழுவ வேண்டும். ஆல்கஹால் அல்லாத சருமத்தை சுத்தம் செய்யக்கூடிய பேஸ்வாஷை பயன்படுத்தலாம். இதனால் சருமம் பொலிவுடன் இருக்கும்.

மிகவும் கடினமான அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது. இது எண்ணெய் சருமத்தை மேலும் பாதிக்கும். அதிக ரசாயனங்கள், செயற்கை வாசனைத் திரவியங்கள் நிறைந்த அழகு சம்பந்தப்பட்ட தயாரிப்புகளைப் பயன்படுத்தக் கூடாது.

அதிக ரசாயனங்கள் கலக்காத டோனர்ஸ்களை பயன்படுத்தலாம். இது சருமத்தில் உள்ள எண்ணெய்யைக் குறைக்கும்.

கடினமாக உள்ள மாய்சரைஸர்களைத் தவிர்த்து இலகுவாக உள்ள க்ரீம்களை பயன்படுத்த வேண்டும். ஒட்டுமொத்தமாக சருமத்திற்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கக் கூடாது.

கோடையில் வெயிலில் இருந்து தப்பிக்க சன்ஸ்க்ரீன் க்ரீம்களைப் பயன்படுத்தலாம். எண்ணெய் கலக்காத சன்ஸ்க்ரீன்களை பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

முகத்தை அடிக்கடி தொடுவதைத் தவிர்க்க வேண்டும். இது கையில் இருந்து பாக்டீரியா, அழுக்கு ஆகியவற்றை சருமத்திற்கு கடத்தும். இதனால் எண்ணெய் சருமம் மேலும் பாதிக்கப்படும். முகத்தை தொட வேண்டிய அவசியம் வரும்போது கைகளை கழுவிவிட்டு தொடலாம்.

தோல் நிபுணரின் அறிவுரைப்படி அழகு சாதன தயாரிப்புகளைப் பயன்படுத்துவது நல்லது.

By admin