• Wed. Jul 16th, 2025

24×7 Live News

Apdin News

எண்ணெய் மற்றும் சர்க்கரை உணவுகள் குறித்து எச்சரிக்கும் மத்திய அரசு – என்ன ஆபத்து?

Byadmin

Jul 15, 2025


உடல் பருமன், சர்க்கரை பலகை, எண்ணெய் பலகை, உணவுகள், நோய்கள், நீரிழிவு நோய், மாரடைப்பு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளில் அதில் என்னென்ன சத்துகள் எந்த அளவில் உள்ளன, எவ்வளவு கலோரிகள் உள்ளன என்பன குறித்த தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஆனால், பல்வேறு கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் எனப் பொது இடங்களில் உள்ள கேன்டீன்களில் விற்கப்படும் உணவுகள், இனிப்புகளில் எத்தனை கலோரிகள் உள்ளன என்பது உள்பட எந்தத் தகவல்களும் இருக்காது. குறிப்பாக, சமோசா போன்று பேக்கேஜ் செய்யப்படாமல் வெறுமனே தட்டுகளில் வைத்து வழங்கப்படும் உணவுகள் குறித்த தகவல்கள் நுகர்வோருக்குப் பெரிதும் தெரிவதில்லை.

எனவே, இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம், எய்ம்ஸ் உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் விற்கப்படும் சமோசா உள்ளிட்ட ‘ஜங்க்’ உணவுகள், ஜிலேபி போன்ற இனிப்புப் பண்டங்களில் என்னென்ன உள்ளன என்பது குறித்த அனைத்து தகவல்களையும் சர்க்கரை மற்றும் எண்ணெய் குறித்த எச்சரிக்கைப் பலகைகள் வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.

உடல் பருமன், சர்க்கரை பலகை, எண்ணெய் பலகை, உணவுகள், நோய்கள், நீரிழிவு நோய், மாரடைப்பு

பட மூலாதாரம், fssai

ஒவ்வொரு சிபிஎஸ்இ பள்ளியிலும் இதேபோன்ற எச்சரிக்கைப் பலகைகளை அமைக்க வேண்டும் என கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

By admin