• Tue. Aug 18th, 2026

24×7 Live News

Apdin News

எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என இரு தரப்பிலும் விமர்சனங்களை எதிர்கொள்ளாத சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரின் அதிகாரங்கள் என்ன?

Byadmin

Aug 18, 2026


அவைக்குறிப்பிலிருந்து நீக்கம் - சபாநாயகருக்கான அதிகாரம் என்ன?

பட மூலாதாரம், HANDOUT

ஆளுங்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் அமைச்சர்களின் பேச்சை சபாநாயகர் அவைக்குறிப்பிலிருந்து நீக்க உத்தரவிடுவது என்பது அண்மைக் காலங்களில் அரிதாகவே பார்க்கப்பட்ட ஒன்று.

பொதுவாக, இதுபோன்ற நடவடிக்கைகள் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சுகளுக்கு எதிராகவே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தனது தொடக்கப் பயணத்திலேயே ஆளுங்கட்சி அமைச்சர்களின் கருத்துகளையும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கி, அவையின் விதிகளை அமல்படுத்துவதில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஒருபுறம் அதிக எண்ணிக்கையிலான முதல் முறை உறுப்பினர்களைக் கொண்ட ஆளுங்கட்சி மறுபுறம், முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட நீண்ட சட்டமன்ற அனுபவம் கொண்டவர்களால் நிரம்பிய எதிர்க்கட்சிகள்.

இத்தகைய சமநிலையற்ற அனுபவச் சூழலில், விதிகளை நிலைநாட்டுவதோடு, புதிய உறுப்பினர்களை வழிநடத்தி, எதிர்க்கட்சிக்கும் உரிய இடமளித்து அவையை நடத்துவது ஜே.சி.டி. பிரபாகருக்கு முன் இருக்கும் முக்கியமான சவாலாகியுள்ளது.

அமைச்சர்களும் விதிவிலக்கு அல்ல

நடைபெற்று வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் சட்டத்துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார் பேசியபோது, முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி தொடர்பான கருத்துக்களை முன்வைத்தார்.

By admin