• Tue. Jun 30th, 2026

24×7 Live News

Apdin News

எத்தியோப்பியாவிலிருந்து சென்னை கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி போதைப்பொருள் பறிமுதல்!

Byadmin

Jun 30, 2026


எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் விமானத்தில் போதைப்பொருட்கள் கடத்தி கொண்டு வரப்படுவதாக மத்திய குற்றப்பிரிவு தடுப்பு புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக அவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க, இன்று வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

இதில், எத்தியோப்பியா நாட்டிலிருந்து சென்னை வந்த 25 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் சோதனை நடத்தியதில், அவரிடம் போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது.

அவரது உடமைகளைச் சோதித்தபோது எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அவரை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தியபோது அதிர்ச்சித் தகவல் வெளியானது.

By admin