• Sun. Jun 28th, 2026

24×7 Live News

Apdin News

‘என் கண்ணுக்கொரு நிலவா’ : இசையமைப்பாளராக கே.பாக்யராஜ் மாறிய பின்னணி

Byadmin

Jun 28, 2026


சாந்தனு பாக்யராஜ்

பட மூலாதாரம், Shanthanu Bhagyaraj

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை வகுத்துக் கொண்ட இயக்குநர் கே.பாக்யராஜ், சனிக்கிழமையன்று (ஜூன் 27) சென்னையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 73.

இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பத்திரிகையாளர் என பன்முகங்கள் கே.பாக்யராஜுக்கு இருந்தாலும் இசையமைப்பாளராகவும் தனி முத்திரையைப் பதித்தார்.

இளையராஜாவுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே தான் இசையமைப்பாளரானதாக நேர்காணல் ஒன்றில் கே.பாக்யராஜ் குறிப்பிட்டிருந்தார். அது என்ன மோதல்? அவர் இசையமைத்த பாடல்கள் எவை?

இயக்குநர் பாரதிராஜாவுடன் ’16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’ உள்பட பல படங்களில் உதவி இயக்குநராக கே.பாக்யராஜ் பணிபுரிந்தார். 1979 ஆம் ஆண்டு வெளியான ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தின் மூலம் இயக்குநராக அவர் அறிமுகம் ஆனார்.

அதே ஆண்டு வெளியான பாரதிராஜாவின் ‘புதிய வார்ப்புகள்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். 1981 ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கிய படங்கள் அனைத்தும் வெற்றிப்படங்களாக இருந்தன.

By admin