• Sun. Jun 28th, 2026

24×7 Live News

Apdin News

பாதுகாப்பு படை தலைமையகத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல்.. 4 பேர் பலி – கராச்சியில் பரபரப்பு

Byadmin

Jun 28, 2026


தாக்குதல்

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, அங்கிருந்த மற்ற பயங்கரவாதிகள் படையினரை நோக்கிக் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் மூன்று பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 4 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

ஜமாத் உல் அஹ்ரார்

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜமாத் உல் அஹ்ரார் பொறுப்பேற்றுள்ளது.

தாக்குதல் நடந்த குலிஸ்தான் இ ஜவ்ஹர் சாலையானது கராச்சியின் முக்கியப் பல்கலைக்கழகங்களையும், பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையத்தையும் இணைக்கும் முதன்மைச் சாலையாகும்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரும் மீட்புக் குழுவினரும் அப்பகுதியைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி சாலையை முற்றிலுமாக முடக்கியுள்ளனர்.

By admin