• Fri. Apr 24th, 2026

24×7 Live News

Apdin News

எப்ஸ்டீன் விவகாரம்: இலண்டன் குடியிருப்புகளில் பெண்களை சிறைவைத்து துன்புறுத்தியமை அம்பலம்!

Byadmin

Apr 24, 2026


பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன், இலண்டனில் பல அடுக்குமாடி குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து, தான் துன்புறுத்திய பெண்களை அங்கேயே தங்க வைத்திருந்தது பிபிசி நடத்திய புலனாய்வில் அம்பலமாகியுள்ளது.

கென்சிங்டன் மற்றும் செல்சி போன்ற வசதி படைத்த பகுதிகளில் நான்கு குடியிருப்புகளை அவர் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் எப்ஸ்டீன் கோப்புகளில் கண்டறியப்பட்டுள்ளன.

முக்கியமாக, வர்ஜீனியா கிஃபெரே அளித்த புகாரை இங்கிலாந்து காவல்துறை விசாரிக்க மறுத்த பிறகுதான், ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பல பெண்கள் இலண்டனுக்குக் கடத்தி வரப்பட்டுள்ளனர்.

இந்தக் குடியிருப்புகளில் தங்கியிருந்த பெண்கள், எப்ஸ்டீனின் பாலியல் கடத்தல் வலையமைப்பிற்கு ஏனைய பெண்களைச் சேர்க்க வற்புறுத்தப்பட்டதும், அங்கிருந்து யூரோஸ்டார் ரயில் மூலம் அவர்கள் அடிக்கடி பாரிஸிற்கு அழைத்துச் செல்லப்பட்டதும் மின்னஞ்சல் தகவல்கள் மூலம் உறுதியாகியுள்ளது.

எப்ஸ்டீன் உயிரிழப்பதற்கு சில மாதங்கள் முன்பு வரை இலண்டனில் அவரது சட்டவிரோதச் செயல்பாடுகள் தடையின்றி நீடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனிதக் கடத்தல் புகார்கள் இருந்தபோதிலும், இலண்டன் காவல்துறை உரிய விசாரணை நடத்தத் தவறிவிட்டதாக மனித உரிமை வழக்கறிஞர்களும் முன்னாள் காவல்துறை அதிகாரிகளும் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால், தாங்கள் சட்டப்படியான கடமைகளைச் சரியாகவே செய்ததாக மெட் காவல்துறை விளக்கமளித்துள்ளது.

By admin