• Tue. Jul 1st, 2025

24×7 Live News

Apdin News

எம்எல்ஏ அருள் மீது வன்னியர் சங்க செயலாளர் குற்றச்சாட்டு | Vanniyar Sangam Secretary accuses MLA Arul

Byadmin

Jul 1, 2025


சேலம்: வன்​னியர் சங்க மாநிலச் செய​லா​ளர் கார்த்​தி, சேலத்​தில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: சேலம் மேற்கு தொகுதி பாமக எம்​எல்ஏ அருள், அன்​புமணி குறித்து தவறாகப் பேசி வரு​வது கண்​டனத்​துக்​குரியது.

அன்​புமணி குறித்து பேச அருளுக்கு என்ன தகுதி உள்​ளது? பாமக உட்​கட்சி விவ​காரம் சரி​யாகி விடக்​கூ​டாது என்​ப​தற்​காக அருள் போன்​றவர்​கள் செயல்​படு​கிறார்​கள். அன்​புமணி குறித்து இனி​யும் தவறாகப் பேசுவதை பொறுத்​துக் கொள்ள முடி​யாது.

பாட்​டாளி மக்​கள் கட்​சியை உடைக்​கும் நோக்​கில் எம்​எல்ஏ அருள் செயல்​படு​கிறார்.ராம​தாஸ் அரு​கில் இருக்​கும் சிலர் திட்​ட​மிட்டு சதி செய்கின்றனர். பாமக தலை​வ​ராக அன்​புமணி 3 ஆண்​டு​கள் இருந்​த​போதும்​கூட, 3 மாதங்​கள் மட்​டுமே நியமனக் கடிதங்​களில் அவரது கையெழுத்து இருந்​தது. அதி​காரத்தை மீறி நிறு​வனரின் கையெழுத்​து​தான் இடம் பெற்​றது.

ராம​தாஸுடன் இருக்​கும் 4 பேர் பிரச்​சினையை தீர்த்து விடு​வார்​களா என்று தெரிய​வில்​லை. கட்​சித் தலை​வரை மாற்​று​வது குறித்து 108 மாவட்​டச் செய​லா​ளர்​களை அழைத்து ராம​தாஸ் ஏன் கருத்து கேட்​க​வில்​லை? இவ்​வாறு அவர்​ கூறினார்.



ny_share_save_container addtoany_content addtoany_content_bottom">

By admin