• Sun. Jun 28th, 2026

24×7 Live News

Apdin News

‘எம்.ஜி.ஆரின் கலையுலக வாரிசு, தனிக் கட்சித் தொடக்கம்’ – கே.பாக்யராஜ் கடந்து வந்த பாதை

Byadmin

Jun 28, 2026


பாக்யராஜ், இயக்குநர் பாக்யராஜ் கடந்து வந்த பாதை

பட மூலாதாரம், X/EPS Tamil Nadu

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழ்த் திரை உலகின் மூத்த கலைஞரான கே.பாக்யராஜ் இன்று காலமானார். இயக்குநர், நடிகர், எழுத்தாளர் மட்டுமல்லாது இசையமைப்பாளராகவும் பன்முகத் தன்மை கொண்டவராக அவர் செயல்பட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த பாக்யராஜை கௌரவிக்கும் வகையில் சமீபத்தில் பாராட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருந்தன. அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாக்யராஜ் உடன் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

எழுத்தாளராக, உதவி கதாபாத்திரமாக தொடங்கிய பாக்யராஜின் பயணம் ‘தற்செயல் ஹீரோ’ ஆக பரிணமித்து தனித்துவமான இயக்குநர், குணச்சித்திர நடிகர் என்கிற நிலை வரை உயர்ந்தது.

திரை உலகம் என்பதையும் தாண்டி அரசியல் களத்திலும் தனிக் கட்சித் தொடங்கி பயணித்த பாக்யராஜ் இறுதியில் அரசியலில் இருந்து ஒதுங்கினார்.

கோவை ராஜா பாக்யராஜ் ஆன கதை

ஈரோடு மாவட்டம் (அப்போது ஒன்றுபட்ட கோவை மாவட்டமாக இருந்தது) வெள்ளாங்கோவில் கிராமத்தில் பிறந்தவர் பாக்யராஜ். சினிமா கனவோடு சென்னைக்கு வந்தவர் இயக்குநர் பாரதிராஜாவிடம் அறிமுகமாகி உதவி இயக்குநராக வேலை செய்யத் தொடங்கினார்.

By admin