• Fri. Aug 28th, 2026

24×7 Live News

Apdin News

எல்நினோ: பெருங்கடல்களின் சராசரி வெப்பநிலை புதிய உச்சத்தை எட்டியிருப்பதால் என்ன பாதிப்பு?

Byadmin

Aug 28, 2026


துருவப் பகுதிகளைத் தவிர்த்து, உலகின் கடல் பரப்பின் சராசரி வெப்பநிலை சனிக்கிழமை 21.1°C-ஐ எட்டியதாக ஐரோப்பிய காலநிலை மாற்ற சேவையான கோபர்நிகஸ் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

பட மூலாதாரம், NOAA

படக்குறிப்பு, எல் நினோ நிகழ்வானது, கிழக்கு மற்றும் மத்திய வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் வழக்கத்திற்கு மாறாக வெப்பமான நீரை ஏற்படுத்துகிறது.

    • எழுதியவர், மார்க் பாயிண்டிங்
    • பதவி, பிபிசி செய்திகள்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் எல் நினோ நிகழ்வு ஆகியவற்றால் உலகின் பெருங்கடல்கள் இதுவரை இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த சராசரி வெப்பநிலையை எட்டியுள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

துருவப் பகுதிகளைத் தவிர்த்து, உலகின் கடல் பரப்பின் சராசரி வெப்பநிலை சனிக்கிழமை 21.1°C-ஐ எட்டியதாக ஐரோப்பிய காலநிலை மாற்ற சேவையான கோபர்நிகஸ் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

2024 மார்ச் மாதத்தில் மூன்று வெவ்வேறு நாட்களில் பதிவான 21.09°C வெப்பநிலையைவிட இந்த அளவு சற்று அதிகமாகும். இந்தக் காலகட்டத்திற்கான சராசரி வெப்பநிலையைவிட இது கணிசமாக அதிகமாக உள்ளது.

கடல் வெப்பமடைதல் தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரிப்பது, கடல் மட்டம் உயர்வது மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுவது உள்ளிட்ட தொலைநோக்கு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

“இந்தப் புதிய உச்சம், கடல் மீதான அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான மற்றொரு தெளிவான அறிகுறியாகும்” என்று கோபர்நிகஸின் துணை இயக்குநர் முனைவர் சமந்தா பர்கெஸ் தெரிவித்தார்.

By admin