• Mon. Jul 14th, 2025

24×7 Live News

Apdin News

எழுவைதீவுக் கடலில் மிதந்த ஒன்றரைக் கோடி ரூபா பெறுமதியான கஞ்சா!

Byadmin

Jul 14, 2025


யாழ்ப்பாணம், எழுவைதீவுப் பகுதியில் 15 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

எழுவைதீவு கடற்பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றுகாவல் நடவடிக்கையின் போது, கடலில் சந்தேகத்துக்கு இடமான முறையில் மிதந்து வந்த பொதிகளை மீட்டு, சோதனையிட்ட போது அவற்றினுள் இருந்து சுமார் 15 மில்லியன் ரூபா பெறுமதியான 38 கிலோ 700 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகளை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்றுறைப் பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

By admin