• Wed. Jul 29th, 2026

24×7 Live News

Apdin News

எவா பெரான்: 16 ஆண்டுகளாக உடல் மறைத்து வைக்கப்பட்ட ஆர்ஜென்டினா முதல் பெண்மணியின் கதை

Byadmin

Jul 29, 2026


எவா பெரான்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஃபியோனா மெக்டொனால்ட்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள சில தகவல்கள் சங்கடம் ஏற்படுத்தலாம்.

ஆர்ஜென்டினாவின் புகழ்பெற்ற முதல் பெண்மணி 1952 ஜூலையில் காலமானார். அதற்கு 60 ஆண்டுகள் கழித்து அவருடைய உடல் விநோதமான முறையில் காணாமல் போனது பற்றியும் உலகைச் சுற்றிய அதன் 16 ஆண்டுகால பயணம் பற்றியும் பிபிசி மறுபதிவு செய்தது.

1952-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி எவா பெரான் மரணமடைந்த சில நேரத்தில் மருத்துவர் பெட்ரோ ஆரா தனது பணியைத் தொடங்கினார். லெனின் மற்றும் ஸ்டாலினின் உடல்களை ரஷ்யர்கள் பாதுகாத்து வைத்திருந்த அதே முறையில், ஆர்ஜென்டினாவின் முதல் பெண்மணியின் உடலையும் பதப்படுத்தி வைக்கும் பணி அந்தப் புகழ்பெற்ற ஸ்பானிய உடற்கூறியல் நிபுணரிடம் ஒப்படைக்கப்பட்டது. விடா என அன்போடு அழைக்கப்பட்ட அவருடைய உடல் தொழிலாளர் அமைச்சகக் கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்தது. தொழிலாளர்களுக்கான நினைவுச் சின்னம் ஒன்று அங்கே அமைக்கப்படவிருந்தது. அதன் அடிப்பகுதியில் இருந்த ஒரு கண்ணாடிப் பெட்டி அவரது இறுதி ஓய்விடமாக அமையவிருந்தது.

எனினும் அதற்கு மூன்று ஆண்டுகள் கழித்து 1955-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவருடைய கணவரும் அதிபருமான ஜுவான் பெரோன் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பில் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டு நாட்டை விட்டுச் சென்றார். புதிய அரசு எவா பெரோனின் உடலைத் திருட முடிவெடுத்தது. அதிலிருந்து தான் 16 ஆண்டுகால அசாத்தியமான பயணம் தொடங்கியது. அவருடைய ராணுவ உளவுப் பிரிவு மையத்திலும், ஒரு வேனிலும், மிலானில் புதைக்கப்பட்டு, மேட்ரிட்டுக்கு எடுத்து வரப்பட்டும் இருந்த நிலையில் இறுதியாக பியூனஸ் அயரஸில் பலமாக பாதுகாக்கப்பட்ட ஓர் இடத்தில் வைக்கப்பட்டது.

தனது 33வது வயதில் கருப்பை வாய் புற்றுநோயால் வா பெரோன் உயிரிழந்த பிறகு அவரது உடலைப் பதப்படுத்தி வைக்க அவருடைய கணவருக்கு அரசியல் காரணங்கள் இருந்தன. அவருடைய ஏழ்மையான கிராமப்புற பின்னணியும் முதல் பெண்மணியாக அவர் செய்த தொண்டு பணிகளும் உழைக்கும் வர்க்க மக்கள் மத்தியில் அவருக்கு பலமான ஆதரவு தளத்தைப் பெற்றுத் தந்திருந்தது.

By admin