• Thu. Oct 22nd, 2026

24×7 Live News

Apdin News

எஸ்பிஐ தரவு கசிவு: என்ன தகவல்கள் கசிந்தன? வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

Byadmin

Oct 22, 2026


எஸ்பிஐ தரவு கசிவு, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், டார்க் வெப்

படக்குறிப்பு, டார்க் வெப்-இல் வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்ததால் வங்கியின் வணிக செயல்பாடுகள், நிதிநிலை அல்லது வணிகத் தொடர்ச்சியில் எந்தப் பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை என எஸ்பிஐ தெரிவித்துள்ளது (கோப்புப் படம்).

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் (எஸ்பிஐ) ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் தகவல்கள் டார்க் வெப்-இல் கசிந்துள்ளன.

இந்த தரவு கசிவு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக புதன்கிழமை பங்குச்சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் வங்கி தெரிவித்துள்ளது.

டார்க் வெப்-இல் கசிந்த தரவுகளில், 3,897 வாடிக்கையாளர்களின் பதிவுகளில் தனிப்பட்ட அடையாளத் தகவல்கள் (பிஐஐ) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று வங்கி கூறியுள்ளது. பிஐஐ என்பது பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, ஆதார் எண் அல்லது வங்கியின் சிஐஎஃப் எண் போன்ற விவரங்களைக் குறிக்கும்.

தரவுகள் அம்பலமாகியிருப்பது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளதாகவும், இதனால் வாடிக்கையாளர்கள் மோசடிக்கு ஆளாக நேரிடலாம் என்றும் மும்பை பங்குச்சந்தையில் (பிஎஸ்இ) தாக்கல் செய்த அறிக்கையில் வங்கி குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், இந்தச் சம்பவத்தை சமாளிக்கவும், அதன் பாதிப்பைக் குறைக்கவும் உரிய நடைமுறைகளைத் தொடங்கியுள்ளதாக வங்கி கூறியுள்ளது. இந்த நிகழ்வால் வங்கியின் வணிக செயல்பாடுகள், நிதி நிலைமை அல்லது வணிகத் தொடர்ச்சி ஆகியவற்றில் எந்த பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கியின் கூற்றுப்படி, அதன் முக்கிய செயல்பாடுகள் எந்த இடையூறுமின்றி வழக்கம் போல் தொடர்கின்றன.

By admin