• Thu. Oct 22nd, 2026

24×7 Live News

Apdin News

மார்கோ ரூபியோ ஜாம்நகர் ரிலையன்ஸ் ஆலைக்கு சென்றது ஏன்? அதற்கும் அமெரிக்க எரிபொருள் நெருக்கடிக்கும் என்ன தொடர்பு?

Byadmin

Oct 22, 2026


ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

படக்குறிப்பு, ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள சேமிப்புத் தொட்டிகள்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தற்போது இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

புதன்கிழமை, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அவர் பார்வையிட்டார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், உலகிலேயே மிகப்பெரியது. இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள இந்த ஆலை, ரஷ்யா, வெனிசுவேலா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயைப் பெற்று, உலக சந்தைகளுக்கான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளாக மாற்றுகிறது. இதன் மூலம், மத்திய கிழக்கில் நெருக்கடிகள் ஏற்படும்போதும் எரிபொருள் விநியோகத்தைத் தொடர்ந்து பராமரிக்க உதவுகிறது.

உலக சந்தையில் அதிகரித்து வரும் டீசல் விலையைக் குறைக்க டிரம்ப் நிர்வாகம் முயன்று வருகிறது. இரான் போர் மற்றும் ஹோர்மூஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள முடக்கத்தால் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் ரூபியோவின் இந்தப் பயணம் அமைந்துள்ளது.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, இது முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

By admin