• Thu. Oct 8th, 2026

24×7 Live News

Apdin News

எஸ்.ஐ.ஆர் தொடர்பான எதிர்க் கட்சிகளின் போராட்டம் – பாகிஸ்தான், பிரிட்டனில் பேசப்படுவது என்ன?

Byadmin

Oct 8, 2026


டெல்லி போராட்டத்தில் ராகுல் காந்தி

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்ஐஆர்) நடைமுறையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள், எதிர்க் கட்சிகளின் போராட்டம் ஆகியவை இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாட்டு ஊடகங்களிலும் பேசுபொருளாகியுள்ளன.

பிரிட்டனின் தி கார்டியன், கத்தாரின் அல் ஜசீரா, ஜெர்மனியின் டாய்ச்சே வெல்லே, பாகிஸ்தானின் டான் மற்றும் ஜியோ நியூஸ் உள்ளிட்ட ஊடகங்கள் இந்த முழு விவகாரத்தையும் வெவ்வேறு கோணங்களில் செய்தியாக வெளியிட்டுள்ளன.

ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென்றும், எஸ்ஐஆர் நடைமுறையை ரத்து செய்ய வேண்டுமென்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி மற்றும் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க் கிழமையும் புதன்கிழமையும் டெல்லி சாலைகளில் போராட்டம் நடத்தினர்.

இதுதவிர, காக்ரோச் ஜனதா கட்சி அமைப்பும் கடுமையாக எதிர்த்து வருகிறது. பிரதமர் மோதி தலைமையிலான அரசும் ஞானேஷ் குமாரும் கூட்டாகச் செயல்படுவதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டுகிறது.

பிரிட்டனின் ‘தி கார்டியன்’ கூறியது என்ன?

பிரிட்டனின் தி கார்டியன், இதை வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் நடைமுறை தொடர்பான சர்ச்சையாகப் பார்த்துள்ளது.

By admin