• Thu. Oct 8th, 2026

24×7 Live News

Apdin News

நானா படேகர் 75 வயதில் காலமானார் – பழம்பெரும் நடிகர் நானா படேகர் 75 வயதில் காலமானார் – பிரபலங்கள், தலைவர்கள் இரங்கல்

Byadmin

Oct 8, 2026


நானா படேகரின் உடல்நிலை குறித்து இதற்கு முன்பு கவலைக்குரிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை
படக்குறிப்பு, நானா படேகரின் உடல்நிலை குறித்து இதற்கு முன்பு கவலைக்குரிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பிரபல நடிகர் நானா படேகர் 75 வயதில் காலமானார். ஊடக செய்திகளின்படி, கோவாவில் அவர் உயிரிழந்தார். இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி, இன்று அதிகாலை 5.20 மணியளவில் தனது இல்லத்தில் ஏற்பட்ட கடுமையான மாரடைப்பால் நானா படேகர் உயிரிழந்தார்.

பிபிசி மராத்தி, அவரது மகன் மல்ஹார் படேகரை தொடர்புகொண்டு பேசியது. நானா படேகர் கோவாவில் உயிரிழந்ததாக மல்ஹார் படேகர் பிபிசியிடம் தெரிவித்தார். “இந்தத் துயரமான செய்தி உண்மைதான்” என்று அவர் கூறினார்.

ஏஎன்ஐ செய்தி முகமை வெளியிட்ட தகவலின்படி, “45 நிமிடங்கள் தொடர்ந்து சிபிஆர் சிகிச்சை அளித்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இது தொடர்பாக ‘மெடிகோ-லீகல் கேஸ்’ பதிவு செய்யப்பட்டுள்ளது. உடற்கூராய்வு செய்யப்படும்” என்று மணிப்பால் மருத்துவமனையின் புற்றுநோயியல் துறைத் தலைவர் டாக்டர் சேகர் சால்கர் தெரிவித்தார்.

நானா படேகரின் இயற்பெயர் விஸ்வநாத் தினகர்ராவ் படேகர். தமிழ், ஹிந்தி, மராத்தி ஆகிய மொழிகளில் வெளியான பல திரைப்படங்களிலும், நாடகங்களிலும் அவர் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கதாநாயகன், இணைக் கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் எனப் பல்வேறு வகை கதாபாத்திரங்களில் படேகர் நடித்துள்ளார். 1978ஆம் ஆண்டு வெளியான ‘கமன்’ திரைப்படத்தின் மூலம் அவர் திரையுலகில் அறிமுகமானார்.

பொம்மலாட்டம், காலா ஆகிய திரைப்படங்கள் மூலம் தமிழ்த் திரையுலகில் தடம் பதித்துள்ள நானா படேகரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய், “சிறந்த நடிகர், அனைத்துக்கும் மேலாக அன்பான நண்பர். நானா படேகர் இனி இல்லை. சற்று முன்புதான் கோவாவில் அவர் காலமானார். நேற்றுதான் அவரிடம் பேசினேன். அவரது கடைசி வார்த்தைகள் ‘கால்ஜி கே ராஜா’ (உன்னைப் பார்த்துக்கொள், ராஜா) என்பதாக இருந்தது.”

By admin