• Thu. Oct 8th, 2026

24×7 Live News

Apdin News

டெல்லியில் ராகுல், பிரியங்கா 2-வது நாள் போராட்டத்தில் என்ன நடந்தது? ஒரு புகைப்படத் தொகுப்பு

Byadmin

Oct 8, 2026

டெல்லியில் ராகுல், பிரியங்கா 2-வது நாள் போராட்டத்தில் என்ன நடந்தது? ஒரு புகைப்படத் தொகுப்பு

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

டெல்லியில் தேர்தல் ஆணையம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட ஜந்தர்மந்தர் செல்லும் வழியிலேயே மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் பின்னர் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டார்.

ஜந்தர் மந்தருக்குச் செல்ல முயன்றபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டதாக அங்கிருந்த பிபிசி செய்தியாளர் தில்நவாஸ் பாஷா தெரிவித்தார்.

காவலில் வைக்கப்பட்ட பிறகு ராகுல் காந்தி பேசுகையில், “நரேந்திர மோதி, அமித் ஷா, மோகன் பகவத் மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோர் என்ன செய்தாலும், நாங்கள் அவர்களை விடமாட்டோம். அவர்கள் நால்வரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று நான் உறுதியளிக்கிறேன்,” என்றார்.

தடுத்து வைக்கப்பட்டிருந்த ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை காவல்துறையினர் இரவு சுமார் 8.30 மணியளவில் விடுவித்தனர். பாரகம்பா காவல் நிலையத்திலிருந்து ராகுல் காந்தி வெளியேறியதை பார்க்க முடிந்தது.

டெல்லியில் ராகுல், பிரியங்கா 2-வது நாள் போராட்டத்தில் என்ன நடந்தது? ஒரு புகைப்படத் தொகுப்பு

படக்குறிப்பு, டெல்லி போராட்டக்களத்தில் திரண்டிருந்த இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள்.
டெல்லியில் ராகுல், பிரியங்கா 2-வது நாள் போராட்டத்தில் என்ன நடந்தது? ஒரு புகைப்படத் தொகுப்பு

படக்குறிப்பு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அளித்த மதிய விருந்துக்கு வருகை தந்த ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்
டெல்லியில் ராகுல், பிரியங்கா 2-வது நாள் போராட்டத்தில் என்ன நடந்தது? ஒரு புகைப்படத் தொகுப்பு

படக்குறிப்பு, டெல்லி ஜன்பத் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மதிய விருந்து அளித்தார். அதில் விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள்.
டெல்லியில் ராகுல், பிரியங்கா 2-வது நாள் போராட்டத்தில் என்ன நடந்தது? ஒரு புகைப்படத் தொகுப்பு

படக்குறிப்பு, டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டக்களத்திற்கு பேருந்தில் செல்லும் கார்கே, பிரியங்கா உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள்.
டெல்லியில் ராகுல், பிரியங்கா 2-வது நாள் போராட்டத்தில் என்ன நடந்தது? ஒரு புகைப்படத் தொகுப்பு

படக்குறிப்பு, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் ராகுல் காந்தி
டெல்லியில் ராகுல், பிரியங்கா 2-வது நாள் போராட்டத்தில் என்ன நடந்தது? ஒரு புகைப்படத் தொகுப்பு

படக்குறிப்பு, ராகுல்காந்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தும் காவல்துறை அதிகாரி
டெல்லியில் ராகுல், பிரியங்கா 2-வது நாள் போராட்டத்தில் என்ன நடந்தது? ஒரு புகைப்படத் தொகுப்பு

படக்குறிப்பு, டெல்லி ஜந்தர் மந்தர் நோக்கி செல்ல முயன்ற இந்தியா கூட்டணி எம்.பி.க்களை காவல்துறையினர் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
டெல்லியில் ராகுல், பிரியங்கா 2-வது நாள் போராட்டத்தில் என்ன நடந்தது? ஒரு புகைப்படத் தொகுப்பு

படக்குறிப்பு, தள்ளுமுள்ளுவுக்கு நடுவே தன்னை அப்புறப்படுத்துவதை தடுக்கும் வகையில் தரையில் படுத்த பிரியங்கா காந்தி
டெல்லியில் ராகுல், பிரியங்கா 2-வது நாள் போராட்டத்தில் என்ன நடந்தது? ஒரு புகைப்படத் தொகுப்பு

படக்குறிப்பு, தரையில் பிரியங்கா காந்தி

காவல்துறையினர் மோசமாக நடந்துகொண்டதாகப் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார்.

By admin