• Thu. Oct 8th, 2026

24×7 Live News

Apdin News

சிவராசா அனோஜன் மீது சௌதி அரேபிய சிறையில் தாக்குதலா? இலங்கை அரசு புதிய தகவல்

Byadmin

Oct 8, 2026


'சௌதி சிறையில் சிவராசா அனோஜன் மீது தாக்குதல்' - காப்பாற்ற இலங்கை அரசு என்ன செய்கிறது?

சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் மீது சிறைச்சாலைக்குள் வைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் இன்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். சிவராசா அனோஜன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமாம் சிறைச்சாலையில் வைத்தே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதையும் அமைச்சர் இதன்போது உறுதிப்படுத்தினார்.

சக கைதி ஒருவருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்தே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

”சிவராசா அனோஜனுக்கும் அவருடன் ஒரே சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றுமொரு கைதிக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதுடன், அது பின்னர் மோதல் வரை வலுப்பெற்றுள்ளது. இதன்போது அனோஜனின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. நகத்தினால் ஏற்படுத்திய காயங்கள் முகத்தில் காணப்படுகின்றன. கத்தி உள்ளிட்ட வேறு எந்தவொரு ஆயுதங்களும் பயன்படுத்தி காயங்கள் ஏற்படுத்தப்படவில்லை. மற்றைய கைதியின் நகத்தினால் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் என மருத்துவ பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரியினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அனோஜனின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் கிடையாது என சிறைச்சாலை அதிகாரிகளினால் எமது தூதரக அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள், தூதரக அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தியுள்ளனர். அனோஜன் தற்போது வேறொரு சிறைக்கூடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.”” என வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் இலங்கை நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

அனோஜனின் விடுதலைக்கான நடவடிக்கை

'சௌதி சிறையில் சிவராசா அனோஜன் மீது தாக்குதல்' - காப்பாற்ற இலங்கை அரசு என்ன செய்கிறது?

சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார்.

By admin