• Thu. Oct 8th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் எந்தெந்த பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்? ‘வெற்றிப் பயணம்’ திட்டம் பற்றிய முழு விவரம்

Byadmin

Oct 8, 2026


வெற்றிப் பயணம் திட்டம்

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யக் கூடிய ‘வெற்றிப் பயணம்’ திட்டம் அக்டோபர் 2-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஒரு பெண் அல்லது திருநர் 80 கி.மீ வரை இலவசமாக பயணம் செய்ய முடியும்.

அப்படி என்றால் ஒருவர் பல பேருந்துகள் மாறி மாறி , எவ்வளவு கிலோமீட்டர் தூரம் வரை வேண்டுமானாலும் இலவசமாக பயணம் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

‘ஆம்’ என்பதே அதற்கான பதில்.

80 கி.மீ மட்டுமே பயண தூரம் கொண்ட பேருந்துகள்

‘வெற்றிப் பயணம்’ திட்டம் 80 கி.மீக்குள் செல்லக் கூடிய பேருந்துகளுக்கு மட்டுமே பொருந்தும். உதாரணமாக சென்னையிலிருந்து ஒருவர் 75 கி.மீ தூரத்தில் உள்ள காஞ்சிபுரம் வரை செல்ல வேண்டுமானால், இத்திட்டத்தின் கீழ் இயக்கப்படும் பேருந்துகளில் இலவசமாக செல்லலாம்.

By admin