• Thu. Oct 8th, 2026

24×7 Live News

Apdin News

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டி

Byadmin

Oct 7, 2026


மன்னார் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை (06) மாலை மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

சமூக சேவைகள் திணைக்களமும் மன்னார் மாவட்டச் செயலகமும்  இணைந்து ஏற்பாடு செய்த குறித்த விளையாட்டு நிகழ்வில்  மன்னார் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டிருந்தனர்.

மன்னார் மாவட்ட  உதவி அரசாங்க அதிபர் எம் பிரதீப் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில்  சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டார்.

மேலும்  அருட்தந்தை,மேலதிக அரசாங்க அதிபர்  மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன் பங்கு பற்றிய மாற்றுத் திறனாளிகளுக்கும் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டது.

By admin