• Wed. Oct 7th, 2026

24×7 Live News

Apdin News

நடிகர் ஜானி நடிக்கும் ‘ரேணிகுண்டா 2’ படத்தின் அப்டேட்

Byadmin

Oct 7, 2026


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான ஜானி கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ரேணிகுண்டா 2’ படத்தில் இடம்பெற்ற ‘மச்சக்கள்ளி’ எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஆர். பன்னீர்செல்வம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரேணிகுண்டா 2’ திரைப்படத்தில் ஜானி – ஷாலி நிவேகாஸ் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஆர். பி. குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு மனு ரவிச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் வித் த்ரில்லராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை கிங்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் பன்னீர்செல்வம் ஃபிலிம் ஃபேக்டரி ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் கே. தேவகுமார் தயாரித்திருக்கிறார்.

அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘இவன்தான்பா அக்யூஸ்ட் நம்பர் ஒன்.. இவன்தான்வாரி அக்யூஸ்ட் நம்பர் 2..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் முத்தமிழ் எழுத, பின்னணி பாடகர் ஆர். குருவாயூர் துரை மற்றும் பாடகி கவிதா கோபி ஆகியோர் பாடியிருக்கிறார்கள். கிராமிய பின்னணியில் துள்ளலிசை பாணியில் உருவாகியிருக்கும் இந்தப் பாடல் இசை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. அதிலும் இந்தப் பாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஆண் குரல் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது.

The post நடிகர் ஜானி நடிக்கும் ‘ரேணிகுண்டா 2’ படத்தின் அப்டேட் appeared first on Vanakkam London.

By admin