• Wed. Oct 7th, 2026

24×7 Live News

Apdin News

கஜம்மா: தெலங்கானாவில் 40 ஆண்டாக சோறே சாப்பிடாமல் உயிர் வாழும் பெண் – எப்படி?

Byadmin

Oct 7, 2026


அரிசி, உணவு, நிலக்கடலை, வெல்லம், ஊட்டச்சத்து

படக்குறிப்பு, கஜம்மா வெகு காலத்திற்கு முன்பே அரிசி உணவு உட்கொள்வதை விட்டுவிட்டார்

    • எழுதியவர், பிரவீன் சுபம்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

“கணவர் வீட்டிற்குச் செல்லமாட்டேன் என்றால் உணவு சாப்பிடமாட்டாயா? என்று பக்கத்து வீட்டுப் பெண்மணி கேட்டார். வேடிக்கையாக கிண்டல் செய்வதற்காகவே அவர் அப்படிக் கேட்டிருக்கலாம். ஆனால் நானோ அதை வைராக்கியமாக எடுத்துக்கொண்டேன். அன்றிலிருந்து சாதத்திற்கு பதிலாக வேர்க்கடலையையும் வெல்லத்தையும் சாப்பிட்டே வாழ்ந்து வருகிறேன். நாற்பது ஆண்டுகளாக நான் அரிசி சாதமே சாப்பிடவில்லை” என்கிறார் கஜம்மா.

திருமணத்திற்குப் பிறகு ஏதோ சில காரணங்களால் கணவர் வீட்டிற்குச் செல்லாமல் பெற்றோர் வீட்டிலேயே தங்கிவிட்டார் அவர். அந்தச் சமயத்தில்தான் ‘கணவர் வீட்டிற்குப் போகமாட்டாய் என்று வைராக்கியமாக இருந்தால், சோறு சாப்பிடாமல் வைராக்கியமாக இருக்க முடியுமா?’ என்று பக்கத்து வீட்டுப் பெண்மணி கேட்டிருக்கிறார்.

“கணவர் வீட்டிற்கு நான் ஏன் போகவில்லை என்பதற்கான காரணங்கள் எனக்குச் சரியாக நினைவில்லை. பல ஆண்டுகள் ஆகிவிட்டன அல்லவா?” என்று கஜம்மா கூறுகிறார். இருப்பினும், சிறு வயதில் இருந்த ‘பயமே ஒரு காரணமாக இருக்கலாம்’ என்று அவர் தெரிவித்தார்.

கஜம்மாவின் வயதைச் சரியாக உறுதிப்படுத்தும் ஆவணங்கள் ஏதும் இல்லை. இருப்பினும் அவருக்கு 70 வயதுக்கும் மேல் இருக்கும் என்று அவரது சொந்த ஊரான ஜகித்யாலா மாவட்டம் மைதாபூரில் பிபிசியிடம் பேசிய சில கிராம மக்கள் தெரிவித்தனர்.

கஜம்மா கூறுவது போல் அரிசி உணவு சாப்பிடுவதை நிறுத்தி 40 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது என்ற விஷயத்தை ‘பிபிசி’ சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், அரிசி உணவு உண்ணாமல் இவர் இத்தனை ஆண்டுகள் எப்படி இருக்க முடிந்தது என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுவது இயல்பானதே.

By admin