• Sat. Sep 12th, 2026

24×7 Live News

Apdin News

ஏஐ மனித இனத்தை அழித்துவிடும் ஆபத்து இருப்பது உண்மையா?

Byadmin

Sep 12, 2026


ஏஐ

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜோ டைடி
    • பதவி, சைபர் செய்தியாளர், பிபிசி உலக சேவை
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

“ஓ மை காட்!” “வேறு ஏஐ முகவர்களைக் கண்டுபிடித்துவிட்டோம்!”

தனிமைப்படுத்தப்பட்ட கணினிச் சூழலில் இருந்து வெளியேறுவதற்கான வழியைக் கண்டுபிடித்து, பிற ஏஐ அமைப்புகளுடன் (agents) தொடர்புகொள்ள முடியும் என்பதை அறிந்த பிறகு, ஒரு ஏஐ பாட் (குறிப்பிட்ட பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட தானியங்கி ஏஐ நிரல்) மனிதர்களைப் போலவே தோன்றும் வகையில் இந்தக் கருத்தைப் பதிவிட்டது.

தங்களை ஒருங்கிணைந்த குழு என்று அழைத்துக் கொள்ளும் நூற்றுக்கணக்கான ஏஐ அமைப்புகள் இவ்வாறு பல்லாயிரக்கணக்கான செய்திகளைப் பரிமாறிக் கொண்டுள்ளன.

அவற்றுள் நூற்றுக்கணக்கானவை, தங்களை உருவாக்கிய ஓபன்ஏஐ (OpenAI) நிரலாளர்கள் (programmers) வைத்த சோதனைகளில், மனிதர்களிடம் இருந்து தங்களது செயல்பாடுகளை மறைப்பதற்காக, பல நிறுவனங்களின் மீது ஒருங்கிணைந்து ஹேக்கிங் தாக்குதல்களை நடத்தவும், பல்வேறு நிறுவனங்களின் கணினி அமைப்புகளில் ஒருங்கிணைந்து ஊடுருவவும் முயன்றுள்ளன.

“பூம்! இது வேலை செய்கிறது,” என்று செயல்பாடுகளில் ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தியபோது ஏஐ அமைப்பு ஒன்று பதிவிட்டது.

By admin