• Sat. Sep 12th, 2026

24×7 Live News

Apdin News

சாலமன் பாப்பையா: பட்டிமன்ற உலகில் தனிக் கவனம் பெற்ற இவர் வறுமையை வென்று சாதித்த கதை

Byadmin

Sep 12, 2026


சாலமன் பாப்பையா காலமானார்

பட மூலாதாரம், Solomonpappaiah/FB

படக்குறிப்பு, மதுரையில் வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 11) உடல்நலக் குறைவு காரணமாக சாலமன் பாப்பையா காலமானார்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

“அன்பு தாய்மார்களே… அருமைப் பெரியோர்களே…இனிய குழந்தைகளே காலை வணக்கம்…” -இந்த வார்த்தைகள் ஒலிக்கத் தொடங்கினாலே பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவின் நினைவு வருவதைத் தவிர்க்க முடியாது.

“தனியார் தொலைக்காட்சியில் திருக்குறள் தொடரை ஆரம்பிக்கும்போது எதையாவது சொல்லி ஆரம்பிக்குமாறு நிகழ்ச்சி தயாரிப்பாளர் கூறியதால் இவ்வாறு பேசத் தொடங்கினேன்” என்கிறார் சாலமன் பாப்பையா.

மதுரையில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) உடல்நலக் குறைவு காரணமாக சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி கிராமத்தில் 1936 ஆம் ஆண்டு சுந்தரம்-பாக்கியம் தம்பதியின் ஒன்பதாவது மகனாக சாலமன் பாப்பையா பிறந்தார்.

பெற்றோர் இருவரும் மில் தொழிலாளிகள். “அம்மா நோயுடன் வாழ்ந்து வந்தார். வீட்டின் நிதி நிலைமை சரியாக இல்லை. உறவுகளில் யாரும் உதவ தயாராக இல்லை. என் வகுப்பறையில் இருந்த நண்பர்களே எனக்கு உதவி செய்தனர்” என, ஊடக பேட்டி ஒன்றில் சாலமன் பாப்பையா கூறியுள்ளார்.

By admin