• Sat. Sep 12th, 2026

24×7 Live News

Apdin News

மண்டாடி பட விமர்சனம்: நடிகர் சூரி மீண்டும் ஒரு வெற்றிப்படமாக அமையுமா?

Byadmin

Sep 12, 2026


நடிகர் சூரியின் 'மண்டாடி' திரைப்படம் பந்தயம் அடித்ததா? ஊடக விமர்சனம்

பட மூலாதாரம், RS Infotainment/X

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

நடிகர் சூரி, தெலுங்கு நடிகர் சுஹாஸ் நடிப்பில், இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான ‘மண்டாடி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

‘விடுதலை’, ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் இது. கடலோர மக்களின் வாழ்வியலையும் பாய்மரப் படகுப் பந்தயத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் எப்படி இருக்கிறது? ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

படத்தின் கதை என்ன?

ராமநாதபுரம் மாவட்டத்தின் முகவைப்பட்டினம் எனும் கடலோரக் கிராமத்தில் கதை நிகழ்கிறது. அங்கு பாரம்பரியமாக நடக்கும் பாய்மரப் படகுப் பந்தயத்தில் ‘முகவை மைந்தன்ஸ்’ அணியின் கேப்டன் மாரி, எதிரணியான ‘சுனாமி ரைடர்ஸ்’ கேப்டனைக் கொல்ல முயற்சிக்கிறார்.

இதையறிந்த எதிரணி கேப்டனின் தந்தையான சாட்டைப் புலி (சுஹாஸ்), மாரியைக் கொல்ல ஆட்களை அனுப்புகிறார். உயிருக்குப் பயந்து தப்பிக்கும் மாரி, சென்னையில் வசிக்கும் தன் ஊர்க்காரரான முத்துக்காளியிடம் (சூரி) உதவி கோருகிறார்.

By admin