• Sat. Sep 12th, 2026

24×7 Live News

Apdin News

மகளிர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இலங்கை மகளிர் அணி

Byadmin

Sep 12, 2026


இலங்கை மகளிர் அணி வெற்றி:

சற்றே எளிய இலக்கை துரத்திய இலங்கை மகளிர் அணி ஆரம்பத்தில் தடுமாறியது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள்

சமாரி அட்டப்பட்டு 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க இமெஷா துலானி 24 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய சஞ்சனா கவிண்டி ரன் ஏதும் எடுக்காமலும், ஹாசினி பெரெரா 3 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

பிறகு களமிறங்கிய ஹர்ஷிதா சமரவிக்ரம மற்றும் கவிஷா தில்ஹாரி அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்த ஜோடி முறையே 36 மற்றும் 33 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. கடைசியில் 18.4 ஓவர்களில் இலங்கை மகளிர் அணி வெறும் 5 விக்கெட் இழப்புக்கு 134 ரன்களை எடுத்தது. இதன் மூலம் இலங்கை மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை மகளிர் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. நாளை (செப்டம்பர் 13) நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் களம் காண்கின்றன.

By admin