1
இந்தியா – அகமதாபாத்தில் கடந்த ஜூன் மாதம் 12ஆம் திகதி நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கை தமக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக விபத்தில் உயிரிழந்த பயணிகளின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த விசாரணையின் இறுதி அறிக்கை, எதிர்வரும் 2026ஆம் ஆண்டு வெளியிடப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், விபத்துக்குக் காரணமானோர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் கூறுகின்றனர்.
விமானம் புறப்பட்ட சில நொடிகளில் எரிபொருள் தடைபட்டதாகவும் அதனால் விமானி அறையில் குழப்பம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எரிபொருள் தடைபட என்ன காரணம் என்பது தெளிவாக இல்லை என்றும் அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி : எரிபொருள் துண்டிக்கப்பட்டதே ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம்!
முதல் விசாரணை அறிக்கையில் 2 விமானிகள் பேசிக்கொண்ட தகவல்களும் வெளியாகின.
இந்திய விமானிகள் சங்கம், விசாரணையில் தங்களைக் கவனிப்பாளர்களாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வெளிப்படையான விசாரணை வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.
இதேவேளை, அவசரமாக எந்த முடிவுக்கும் வர வேண்டாம் என்று இந்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சு, பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.