• Fri. Aug 1st, 2025

24×7 Live News

Apdin News

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அடுத்தடுத்து இரு இந்திய பெண்கள் தற்கொலை – ஆரம்ப விசாரணையில் என்ன தெரிந்தது?

Byadmin

Jul 31, 2025


சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதுல்யாவின் கணவர் சதீஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் சைட் இன்ஜினியராக பணிபுரிகிறார் (சித்தரிப்புப் படம்)

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி இந்திக்காக

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவில் இந்த மாதத்தில் பதினைந்து நாட்களுக்குள் இரண்டு பெண்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பது, கேரளாவில் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

விபன்சிகா மணியன்(32) மற்றும் அதுல்யா ஷேகர்(30) இருவரும் படித்தவர்களாவும், பணிபுரியும் பெண்களாகவும் இருந்தனர்.

அவர்கள் இந்த முடிவை எடுத்த தினத்தில் விபன்சிகா ஒரு தனியார் நிறுவனத்தில் மனிதவள மேலாளராக இருந்தார், அதுல்யா தனது முதல் பணியில் சேரவிருந்தார்.

இந்த இரு பெண்களும் கேரளாவைச் சேர்ந்தவர்கள், திருமணத்திற்கு பிறகு தங்களது கணவர்களுடன் ஷார்ஜாவில் வசித்து வந்தனர்.

By admin