• Tue. Apr 28th, 2026

24×7 Live News

Apdin News

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமெரிக்கா உடன் ‘நாணய பரிமாற்றம்’ செய்ய விரும்புவது ஏன்? இதனால் யாருக்கு லாபம்?

Byadmin

Apr 28, 2026


அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (யுஏஇ) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (கோப்புப் படம்)

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ‘நாணயப் பரிமாற்றம்’ மூலம் உதவ அமெரிக்க ஆலோசித்து வருவதாக அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்கிழமை அன்று சி.என்.பி.சி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ‘யுஏஇ உடன் நாணயப் பரிமாற்றம் தொடர்பாக ஏதேனும் முன்மொழிவு விவாதிக்கப்பட்டதா’ எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த டிரம்ப், “என்னால் உதவ முடிந்தால் நிச்சயம் உதவி செய்வேன். அவர்கள் ஒரு சிறந்த நாடாகவும் நம்முடைய கூட்டாளியாகவும் இருக்கின்றனர்.” என்றார்.

இரான் உடனான சமீபத்திய போரில் அமீரகம் மிக கடுமையாக இலக்கு வைக்கப்பட்டதாக குறிப்பிட்ட டிரம்ப், “நான் ஆச்சரியப்பட்டேன், ஏனெனில் அவர்கள் உண்மையிலே பணக்காரர்கள். நான் ஓர் ஆண்டுக்கு முன்பு அங்கு சென்று அமெரிக்காவில் ஒரு டிரில்லியன் டாலர் முதலீடு செய்யுமாறு வலியுறுத்தினேன்.” என்றும் தெரிவித்தார்.

“வால் ஸ்ட்ரீட் ஜர்னல்” நாளிதழ் சில தினங்களுக்கு முன்பு இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. அதில் இரான் உடனான போரினால் ஏற்படும் சாத்தியமான நிதி நெருக்கடி சூழலில் உதவுவதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் பேச்சுவார்த்தையை அமெரிக்கா தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

By admin