• Tue. Apr 28th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் தினசரி மின்சார பயன்பாடு 20 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்வு- தடையின்றி மின்சாரம் வழங்க ஏற்பாடு

Byadmin

Apr 28, 2026


தமிழ்நாட்டில் தினசரி மின்சார தேவை சுமார் 16 ஆயிரம் மெகாவாட் ஆகும். கோடை காலங்களில் மின் விசிறி, ஏ.சி., பிரிட்ஜ் போன்ற மின் சாதனங்களின் பயன்பாடு அதிகமாக இருக்கும்.

அந்த வகையில் இப்போது 20 ஆயிரம் மெகாவாட் வரை மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மே 2-ந்தேதி அதிகபட்சமாக 20,830 மெகாவாட் மின்சாரம் பயன்பாட்டில் இருந்தது.

இப்போது கோடை காலம் துவங்கிவிட்டதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக 20,060 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கத்திரி வெயில் என்று சொல்லப்படும் அக்னி நட்சத்திர காலம் மே 4-ந்தேதி தொடங்க உள்ளது. அந்த கால கட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

By admin