• Tue. Jul 1st, 2025

24×7 Live News

Apdin News

ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து ‘கூட்டு ராணுவத்தை’ உருவாக்க முடியுமா? நேட்டோவின் பங்களிப்பு என்ன?

Byadmin

Jul 1, 2025


 பெட்ரோ சான்செஸ்

பட மூலாதாரம், Pier Marco Tacca/Getty Images

படக்குறிப்பு, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்

இந்த ஆண்டு, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, ஐரோப்பாவில் நீடித்த அமைதி ஏற்பட ஒரு வழி இருப்பதாகக் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து ஒரு ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

இது ஒரு புதிய யோசனை அல்ல, ஏனென்றால் நேட்டோவின் ராணுவம் ஏற்கனவே உள்ளது, இதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளல்லாத நாடுகளும் அடங்கும்.

ஆனால் ஐரோப்பாவைச் சுற்றி ஆபத்து சூழ்ந்து வரும் நிலையில், ஐரோப்பா ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்ற யோசனையைக் குறித்து மீண்டும் விவாதங்கள் நடைபெற தொடங்கியுள்ளன.

By admin