• Mon. Sep 7th, 2026

24×7 Live News

Apdin News

ஐ.நா.வில் உலக வரைபட தீர்மானத்தை ஆதரித்த இந்தியா இப்போது ஆட்சேபனை ஏன்?

Byadmin

Sep 7, 2026


ஐ.நா. உலக வரைபட தீர்மானத்தை ஆதரித்த இந்தியா இப்போது ஆட்சேபனை ஏன்?

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஆப்பிரிக்காவின் உண்மையான பரப்பளவை துல்லியமாகக் காட்டும் வகையில் தற்போதைய உலக வரைபடத்தை மாற்றும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை வெள்ளிக்கிழமை நிறைவேற்றியது.

இந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த ஒரே நாடு அமெரிக்கா. பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் இந்தியா உள்ளிட்ட 164 நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவித்தன.

ஆனால், புதிய வரைபடம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.

மூத்த பத்திரிகையாளர் சுஹாசினி ஹைதர், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “புதிய வரைபடத்தில் ஜம்மு – காஷ்மீரின் சில பகுதிகள் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் பகுதிகளாகக் காட்டப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டார்.

புதிய வரைபடம் தொடர்பான இந்த சர்ச்சை குறித்து இந்திய வெளியுறவுத்துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஐ.நா. முன்மொழிந்துள்ள உலக வரைபடத்தில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வரைபடத்தின்படி காட்டப்பட வேண்டும் என்றும், தவறான அல்லது தவறாக வழிநடத்தும் வகையிலான எந்தச் சித்தரிப்பும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் தெரிவித்தது.

By admin