• Wed. Apr 29th, 2026

24×7 Live News

Apdin News

ஒடிசா: இறந்த சகோதரியின் எலும்புகூட்டை இவர் வங்கிக்கு எடுத்துச் சென்றது ஏன்?

Byadmin

Apr 29, 2026


ஒடிசா, ஜித்து முண்டா, வங்கி

பட மூலாதாரம், RAKHI GHOSE

படக்குறிப்பு, ஜித்து முண்டா வங்கிக்குள் நுழைந்தவுடன், அங்கு இருந்த ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் ஆச்சரியமடைந்தனர்.

ஒடிசாவின் கியோன்ஜார் மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கியில் திங்கள்கிழமை (ஏப்ரல் 27) மதியம், 52 வயதான ஜித்து முண்டா தனது தோளில் ஒரு எலும்புக்கூட்டைச் சுமந்தபடி ஒரு வங்கிக்குள் நுழைந்தார். இது அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அது பாட்னா பிளாக்கின் மல்லிபோஷி கிராமத்தில் உள்ள ஒடிசா கிராமின் வங்கியின் கிளை ஆகும்.

பாட்னா பிளாக்கில் உள்ள தியானாலி கிராமத்தைச் சேர்ந்த ஜித்து முண்டா, தனது சகோதரியின் கிராமின் வங்கி கணக்கிலிருந்து 19,300 ரூபாயை எடுக்க விரும்பினார்.

அவரது 56 வயது சகோதரி கல்ரா முண்டா, அண்டை மாவட்டமான ஜாஜ்பூரைச் சேர்ந்த சுக்ரு முண்டாவை மணந்தவர்.

கல்ரா முண்டா மற்றும் சுக்ரு முண்டாவுக்கு ஒரு மகன் இருந்தார். ஆனால், தனது கணவர் மற்றும் மகனின் மறைவுக்குப் பிறகு, கல்ரா முண்டா தியானாலியில் உள்ள தனது தாய் வீட்டுக்குத் திரும்பி, பிழைப்புக்காக ஒரு தினசரி கூலித் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார்.

By admin