• Sat. Sep 21st, 2024

24×7 Live News

Apdin News

ஒடிஷா: ராணுவ அதிகாரியும், வருங்கால மனைவியும் போலீசாரால் துன்புறுத்தப்பட்டார்களா? என்ன நடந்தது?

Byadmin

Sep 21, 2024


ஒடிஷா: ராணுவ அதிகாரியும், வருங்கால மனைவியும் போலீசாரால் துன்புறுத்தப்பட்டார்களா? என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

இந்தக் கட்டுரையில் வரும் விஷயங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஒடிஷாவில், புவனேஷ்வரில் உள்ள ஒரு காவல்நிலையத்தில் ஒரு இந்திய ராணுவ அதிகாரியும், அவரது வருங்கால மனைவியும் தாக்குதல் மற்றும் அத்துமீறலுக்கு உள்ளானதாகக் கூறும் ஒரு வழக்கு செப்டம்பர் 20ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் செப்டம்பர் 14 அன்று நடந்தது.

ஒடிஷா காவல்துறையின் பரத்பூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஐந்து காவலர்கள் மீது குற்றப்பிரிவு இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது. ஆயினும் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்த போலீஸார் இந்தச் சம்பவத்தின் வேறு வடிவத்தை முன்வைத்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட போலீசாரான, ஸ்டேஷன் இன்சார்ஜ் தீன் கிருஷ்ண மிஷ்ரா, சப் இன்ஸ்பெக்டர் வைஷாலினி பாண்டா, உதவி சப் இன்ஸ்பெக்டர்கள் ஷைல்மயி சாஹு, சாகரிகா ரத் மற்றும் கான்ஸ்டபிள் பல்ராம் ஹன்ஸ்தா ஆகியோர் ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

By admin