• Thu. Jul 3rd, 2025

24×7 Live News

Apdin News

ஒன்லைன் பரீட்சைகளில் ஏமாற்றும் மாணவர்களால் கல்வி நெருக்கடி: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்

Byadmin

Jul 2, 2025


ஒன்லைன் பரீட்சைகளில் AI பயன்படுத்தி மாணவர்கள் பாரியளவில் ஏமாற்றுவதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இதன்மூலம் மாணவர்கள் அறிவைத் தேடுவதை நிறுத்திவிட்டதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த தலைமுறை பட்டதாரிகள் விமர்சன சிந்தனையை அடையாமல் தங்கள் பட்டப்படிப்பை முடிக்கப் போகிறார்கள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எதிர்காலத்தில் இது மிகவும் மோசமான கல்வி நெருக்கடி சூழ்நிலையாக மாறும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

அதேவேளை, தங்கள் படிப்பில் பயன்படுத்தும் நேரத்தை மிச்சப்படுத்தும் கண்டுபிடிப்புகளில் AI ஒன்றாகும் என்றும் மாணவர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், பல்கலைக்கழக அமைப்புக்கு AIயில் சில கட்டுப்பாடுகள் தேவை என்று கணக்கெடுப்பு குழுக்கள் சுட்டிக்காட்டுகின்றன.

The post ஒன்லைன் பரீட்சைகளில் ஏமாற்றும் மாணவர்களால் கல்வி நெருக்கடி: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் appeared first on Vanakkam London.

By admin