• Tue. Sep 1st, 2026

24×7 Live News

Apdin News

ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சுவிட வேண்டும்? வீட்டிலேயே சுவாச பரிசோதனை செய்யலாமா? 7 முக்கிய விஷயங்கள்

Byadmin

Sep 1, 2026


நுரையீரல்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

நீங்கள் சமூக வலைதளங்களை தொடர்ந்து கவனித்து வருபவராக இருந்தால், நுரையீரல் செயல்திறனை அறிவதற்கான உத்திகள் என சில வைரல் காணொளிகளை பார்த்திருப்பீர்கள். அதில் சுமார் 50 விநாடிகள் முதல் 1 நிமிடம் வரை மூச்சை இழுத்துப் பிடிக்க முடிந்தால், உங்களின் நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தம் என அந்த காணொளிகளில் கூறப்படுவதை கேட்டிருக்கலாம்.

அந்த காணொளிகளை பார்க்கும் எவருக்கும் அச்சோதனைகளை செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எழும். அதிக நேரம் மூச்சை இழுத்துப் பிடிக்க வேண்டும் என்றுகூட முயற்சி செய்திருப்பீர்கள்.

ஆனால், நீங்கள் இருக்கும் இடத்திலேயே செய்யப்படும் இத்தகைய சோதனைகள் உண்மையிலேயே உங்கள் நுரையீரலின் செயல்திறனை அறிய உதவுமா? இத்தகைய சோதனைகளை எல்லோரும் செய்யலாமா என்ற கேள்வி கூட எழலாம்.

இவற்றை தெரிந்துகொள்வதற்க்கு முன்னர் நுரையீரலின் செயல்பாடுகள் குறித்த சில அடிப்படை தகவல்களை அறிவது அவசியமாகிறது.

1. நுரையீரலின் செயல்பாடு என்ன?

நுரையீரல் இரு முக்கியமான பணிகளை செய்கிறது. ஒன்று, ஆக்சிஜனை உள்ளிழுத்து, அதை ரத்த ஓட்டத்தில் செலுத்துவது. மற்றொன்று, கார்பன் – டை-ஆக்சைடு வாயுவை வெளியேற்றுவது. அதாவது, நாம் உயிர்வாழ்வதற்கு நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் ஆக்சிஜன் அவசியம். அந்த ஆக்சிஜனை உள்ளிழுத்து ரத்த ஓட்டத்தில் செலுத்தும் முக்கியமான பணியை நுரையீரல் செய்கின்றது.

By admin