• Tue. Sep 1st, 2026

24×7 Live News

Apdin News

உத்தரப் பிரதேச பெண் ஐஏஎஸ் அதிகாரி ராஜிநாமா – யோகி அரசில் தொடரும் அதிகாரிகள் ராஜிநாமா

Byadmin

Sep 1, 2026


திவ்யா மிட்டல்

பட மூலாதாரம், dmdeoria

படக்குறிப்பு, திவ்யா மிட்டல் 2013 ஆம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

உத்தரப் பிரதேச கேடரைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) அதிகாரியான திவ்யா மிட்டல் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். தற்போது உத்தரப் பிரதேச அரசின் வருவாய்த்துறையில் சிறப்பு செயலாளராக அவர் பணியாற்றி வருகிறார்.

தனது ராஜிநாமா குறித்து திவ்யா மிட்டல் சமூக வலைதளத்தில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார். எனினும், அவர் தனது ராஜிநாமாவுக்கான காரணம் குறித்து அதில் குறிப்பிடவில்லை.

அவரது சமூக வலைதளப் பதிவு பலரால் பகிரப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு வகையான கருத்துகளும் வெளியாகி வருகின்றன.

இதற்கிடையில், உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், எந்தவொரு சம்பவத்தையும் குறிப்பிடாமல், அதிகாரிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னையாக ஊழல் இருப்பதாக சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

1983-ஆம் ஆண்டு பிறந்த திவ்யா மிட்டல், டெல்லி ஐஐடி-யில் பொறியியல் படிப்பையும், பெங்களூரு ஐஐஎம்-மில் மேலாண்மைப் படிப்பையும் படித்துள்ளார். இதற்கு முன்பு லண்டனிலும் பணியாற்றியுள்ளார்.

By admin