• Tue. Sep 1st, 2026

24×7 Live News

Apdin News

அங்கித் பாலியன்: ஜிம்முக்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்ட ஹரியான்வி இசை கலைஞர் – 2 பேரை என்கவுன்டர் செய்த உ.பி போலீஸ்

Byadmin

Sep 1, 2026


காவல்துறையின் தகவலின்படி, உயிரிழந்த இளைஞர்கள் சுமித் மற்றும் மோகித் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Pankaj Kumar

கடந்த வாரம் மேற்கு உத்தரப் பிரதேசத்தின் ஷாம்லி பகுதியில் பிரபல ஹரியான்வி இசை வீடியோ கலைஞரான அங்கித் பாலியன் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு போலீசாருடன் நடைபெற்றதாகக் கூறப்படும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஷாம்லி காவல்துறையின் தகவலின்படி, கொல்லப்பட்டவர்கள் சுமித் மற்றும் மோகித் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் ஹரியாணா மாநிலத்தின் சோனிபட் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

கொல்லப்பட்ட இருவருக்கும் குற்றப் பின்னணி இருந்ததாகவும் ஷாம்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

திங்கள்கிழமை காலை செய்தியாளர்களிடம் பேசிய ஷாம்லி காவல் கண்காணிப்பாளர் நரேந்திர பிரதாப் சிங், அங்கித் பாலியன் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது இந்த என்கவுன்டர் நடந்ததாகக் கூறினார்.

இந்த என்கவுன்டரில் இரண்டு காவலர்கள் காயமடைந்ததாகவும் ஷாம்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

By admin