• Tue. Sep 1st, 2026

24×7 Live News

Apdin News

மெஸ்ஸி சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு – என்ன கூறினார்?

Byadmin

Sep 1, 2026


சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வை அறிவித்த மெஸ்ஸி

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு தனக்கு “வேதனை அளிப்பதாக” இருந்தாலும், “நேரம் வந்துவிட்டது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

2022-ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவை சாம்பியன் பட்டத்துக்கு அழைத்துச் சென்ற 39 வயதான மெஸ்ஸி, அந்த அணிக்காக 207 போட்டிகளில் விளையாடி 125 கோல்களை அடித்துள்ளார். இதன் மூலம் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் மற்றும் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

அர்ஜென்டினா அணிக்காக தான் அனைத்தையும் கொடுத்துவிட்டதாகவும், தற்போது “இனி கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை” என்றும் மெஸ்ஸி சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,”நேரம் குறைந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வரும். இது என்னை ஆழமாக வேதனைப்படுத்தும் ஓர் அத்தியாயம். தேசிய அணியின் ஒரு பகுதியாக இருப்பதை நான் விரும்புகிறேன், விரும்பினேன், எப்போதும் விரும்புவேன். என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்துவிட்டேன். இனி கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை. மேலும், எனக்குப் பின்னால் வரிசையில் சில மிகச்சிறந்த இளம் வீரர்கள் உள்ளனர். அவர்களுக்குத் தங்களது வாய்ப்பு கிடைக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

மெஸ்ஸி

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது தந்தை ஜார்ஜ், 68 வயதில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தனது கால்பந்து எதிர்காலம் குறித்து ஆலோசித்து வருவதாக மெஸ்ஸி தெரிவித்திருந்தார்.

By admin