• Tue. Jun 2nd, 2026

24×7 Live News

Apdin News

ஒரு மடத்தில் சந்தித்து பின் காதல் மணம் புரிந்த இளம் கன்னியாஸ்திரிகளின் கதை

Byadmin

Jun 2, 2026


ஒரு மடத்தில் சந்தித்து பின் காதல் மணம் புரிந்த இளம் கன்னியாஸ்திரிகள்

பட மூலாதாரம், Courtesy of Francília Costa and Luiza Silvério

படக்குறிப்பு, பிரான்சிலியா கோஸ்டா, லூயிசா சில்வெரியோ

    • எழுதியவர், இயன் ஆல்வ்ஸ்
    • பதவி, பிபிசி நியூஸ் பிரேசில்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

“என்ன ஒரு தலைக்கனம் பிடித்த கன்னியாஸ்திரி, என்ன ஒரு மோசமான கன்னியாஸ்திரி.”

அதனைக் கண்டதும் காதல் என்று சொல்லிவிட முடியாது.

19 வயதில் துறவறப் பயிற்சி மாணவிகளாக சேர்ந்திருந்த கன்னியாஸ்திரி மடத்தில், லூயிசா சில்வேரியோ தனது எதிர்கால மனைவியை முதன்முதலாக சந்தித்தபோது, இருவரும் ஒருவரை ஒருவர் வெறுத்தனர்.

தற்போது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை நடத்தி வரும் அவரது மனைவி பிரான்சிலியா கோஸ்டா, பிபிசி நியூஸ் பிரேசிலிடம் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் .

“ஒரு பெண்ணால் எப்படி இவ்வளவு தலைக்கனத்துடன் இருக்க முடியும்? என நானும் அவரைப் பற்றி இதையேதான் நினைத்துக் கொண்டிருந்தேன்” என்று கூறுகிறார் பிரான்சிலியா .

By admin