விமான நிலைய ஆணையம்
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரிகளுடன் இணைந்து, விமான நிலைய ஆணையம் ஆய்வறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. அந்த அறிக்கையை விரைவில் முதல்வர் விஜய்யிடம் அதிகாரிகள் சமர்ப்பிக்க உள்ளனர்.
அறிக்கை குறித்து பேசிய ஆணைய அதிகாரிகள், சென்னையில் 2வது விமான நிலையம் என்பது காலத்தின் கட்டாயம். அதற்காகவே பரந்தூர் விமான நிலையத்தை பரிந்துரைத்துள்ளோம். இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்களை இயக்க முடியும்.
அடுத்த 30 முதல் 50 ஆண்டுகளுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் விமான நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கான நில அமைப்பியல், சுற்றுச்சூழல் தாக்கம் மற்றும் போக்குவரத்து இணைப்பு குறித்த ஆய்வுகள் அனைத்தையும் முடித்து அறிக்கை தயாரித்துள்ளோம்.
விமான நிலையத்தை சுற்றி உருவாக உள்ள ஏரோட்ரோபோலிஸ் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். இந்த திட்டம் தொடர்பாக விரைவில் முதல்வர் விஜய்யை சந்திக்க உள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.