• Thu. Jun 11th, 2026

24×7 Live News

Apdin News

‘ஒரு மார்பகத்தை இழந்ததைவிட தலைமுடியை இழந்தது கொடுமையாக இருந்தது’ – முடி உதிர்வு சிகிச்சையில் புதிய ஆய்வு தரும் ‘நம்பிக்கை’

Byadmin

Jun 11, 2026


தலைமுடி, செயற்கை முடி, முடி உதிர்வு சிகிச்சை

என் தலைமுடி உதிரத் தொடங்கிய அந்த தருணம் எனக்கு இன்னும் தெளிவாக நினைவில் இருக்கிறது.

ஒரு சனிக்கிழமை மாலை, என் நண்பரின் 40-வது பிறந்தநாள் விழாவிற்குத் தயாராகிக் கொண்டிருந்தேன். ஹோட்டல் அறையில் குளியல் தொட்டியின் மீது குனிந்து தலைமுடியை அலசிக் கொண்டிருந்தேன். அதற்கு 17 நாட்களுக்கு முன்புதான் மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சையாக ஆறு கீமோதெரபி அமர்வுகளில் முதல் சிகிச்சையை மேற்கொண்டிருந்தேன். ஆனால் அதற்கு பல நாட்களுக்கு பின்னும் தலைமுடி உதிரவில்லை.

“ஒருவேளை அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருத்தியாக இருக்கலாம்” என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால், என் தலையின் மீது ஷவரை பிடித்தபடி இருந்தபோது, திடீரென அதில் கற்றை கற்றையாக முடி இருந்ததைப் பார்த்தேன். நீண்ட பழுப்பு நிற முடிக்கற்றைகள் என் கண் முன்னே கொட்டிக் கொண்டிருந்தாலும் அதைத் தடுக்க என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

“எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் அது இவ்வளவு திடீரென்று நிகழும் என நான் எதிர்பார்க்கவில்லை.

By admin