• Sat. Sep 21st, 2024

24×7 Live News

Apdin News

ஒரே நாடு-ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசு என்ன சிரமங்களை எதிர்கொள்ளக்கூடும்?

Byadmin

Sep 21, 2024


ஒரே நாடு ஒரே தேர்தல் காரணமாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே இழுபறி ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் காரணமாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே இழுபறி ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை புதன்கிழமை அன்று ஏற்றுக்கொண்டது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டிருந்தது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேர்தல் சீர்திருத்தங்களுக்கான ஒரு பெரிய நடவடிக்கை என்று மத்திய அரசு கூறுகிறது.

குழுவின் பரிந்துரைகளின் படி இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த இரண்டு முக்கிய அரசியலமைப்பு திருத்தங்கள் தேவைப்படும். இதன்கீழ் அரசியலமைப்பின் 83 மற்றும் 172-வது பிரிவில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

ஆனால், தற்போதைய மக்களவையில் பா.ஜ.கவுக்கு 240 இடங்கள் மட்டுமே உள்ளது. பெரும்பான்மைக்கு மோதி அரசுக்கு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவை. எனவே இது அரசுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது.

By admin