• Wed. Oct 21st, 2026

24×7 Live News

Apdin News

‘ஒவ்வொரு பூக்களுமே’ உள்பட பா.விஜய் எழுத்தில் அதிக கவனம் பெற்ற 10 பாடல்கள் எவை?

Byadmin

Oct 21, 2026


பா.விஜய் பிறந்தநாள் இன்று

படக்குறிப்பு, பா.விஜய் பிறந்தநாள் இன்று

கோயம்புத்தூரில் மில் தொழிலாளி வி. பாலகிருஷ்ணன் – ஆசிரியர் சரஸ்வதி தம்பதியின் மகனாக பிறந்து, அங்கேயே படித்தவர் கவிஞர் பா.விஜய். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி பயின்று பி.லிட். பட்டமும் தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

கல்லூரியில் படிக்கும் போது அவர் எழுதிய ‘இந்தச் சிப்பிக்குள்’ என்னும் தலைப்பிலான முதல் கவிதைத் தொகுப்பு, சிற்பி, மன்னர்மன்னன் தலைமையில் வெளியானது. தொடர்ந்து சில கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டார்.

சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தவர் ஆரம்பத்தில் பாக்யராஜ் நடத்திய பாக்யா பத்திரிகையில் பணியாற்றினார். பாக்யராஜ் இயக்கிய ஞானப்பழம் படத்தின் மூலம், 1996-ஆம் ஆண்டில் அவர் பாடலாசிரியர் ஆனார்.

தேசியவிருது பெற்ற பாடல்

கடந்த 30 ஆண்டுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பா.விஜய் எழுதியுள்ளார். ஞாபகங்கள், இளைஞன் , ஆருத்ரா, ஸ்ட்ராபெர்ரி, நையப்புடை, தகடு தகடு உள்ளிட்ட படங்களி்ல் கதைநாயனாக அவர் நடித்துள்ளார்.

ஸ்ட்ராபெர்ரி. ஆருத்ரா, அகத்தியா உள்ளிட்ட படங்களை அவர் இயக்கி உள்ளார். சேரன் இயக்கிய ஆட்டோகிராப் படத்திற்காக இவர் எழுதிய ஒவ்வொரு பூக்களுமே பாடல் தேசியவிருது பெற்றது. பல்வேறு கட்டுரை தொகுதிகள், நாவல்கள், நுால்கள் எழுதியுள்ளார்.

By admin