• Thu. Jun 18th, 2026

24×7 Live News

Apdin News

கடும் சவால்கள்; இந்தியாவில் விமான பயணம் பாதுகாப்பானதா? – பிபிசி புலனாய்வு

Byadmin

Jun 18, 2026


ஏர் இந்தியா

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் அண்மைக் காலங்களில் நிகழ்ந்துள்ள தொடர்ச்சியான விமான விபத்துகள், சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு குறித்த தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளன (கோப்புப் படம்)

    • எழுதியவர், ஜுகல் புரோஹித்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமானப் போக்குவரத்து சந்தை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. சர்வதேச வான் போக்குவரத்து சங்கத்தின்படி, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. அரசாங்கத்தின் தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் இந்திய விமான நிலையங்கள் மூலம் சுமார் 35 கோடி பேர் பயணித்துள்ளனர்.

எதிர்காலம் தொடர்பாக இந்தியா மிகவும் நேர்மறையாக உள்ளது.

தற்போது இந்தியாவில் 163 விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. அடுத்த 20 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 400 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் வணிக விமானங்களின் எண்ணிக்கை தற்போது 800-ஐ கடந்துள்ளது. 2040 வாக்கில் இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துடன் பணியாற்றிய அதிகாரி ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசுகையில், “அமெரிக்கா மற்றும் சீனாவில் இருக்கும் சராசரியைவிட குறைவாகவே இந்தியர்கள் பயணிக்கின்றனர். எனவே வளர்ச்சிக்கான நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.” என்றார்.

By admin