• Wed. Jul 30th, 2025

24×7 Live News

Apdin News

கடும் பசியில் காஸா மக்கள் – பட்டினி மனித உடலை என்ன செய்யும்?

Byadmin

Jul 30, 2025


கடும் பசியில் காஸா மக்கள் -  பட்டினி உடலை என்ன செய்யும்?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ரெபேக்கா தோர்ன் மற்றும் ஏஞ்சலா ஹென்ஷால்
    • பதவி, பிபிசி உலக சேவை

காஸாவில், மூன்றில் ஒருவர் பல நாட்கள் உணவு இல்லாமல் இருக்கிறார் என ஐ.நாவின் உணவு உதவித் திட்டம் எச்சரித்துள்ளது.

இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு காஸாவில் மக்கள் பட்டினியால் வாடவில்லை எனக் கூறியிருந்தார். ஆனால், “காஸாவில் உண்மையான பட்டினி நிலவுகிறது” என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

காஸா நகரத்தில் உள்ள ஐந்தில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது என்று ஐ.நா.பாலத்தீனிய அகதிகள் நிறுவனம் (UNRWA) தெரிவித்துள்ளது.

உணவுப் பற்றாக்குறையால், மருத்துவமனைகளில் கடுமையான சோர்வுடன் மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். சிலர் தெருக்களில் சோர்ந்து விழுகிறார்கள் என்றும் ஐ.நா. கூறியுள்ளது.

By admin