• Fri. Sep 20th, 2024

24×7 Live News

Apdin News

கண் மை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஆபத்து: எச்சரிக்கும் மருத்துவர்கள் – தடுப்பது எப்படி?

Byadmin

Sep 13, 2024


கண் மை பயன்படுத்துவதால் புற்றுநோய் வரக்கூடுமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், அம்ரிதா பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழ்

அப்போது கல்லூரி மாணவியாக இருந்த சாருலாதவிற்கு கண்ணில் மை இட்டுக்கொள்ள மிகவும் பிடிக்கும். தினமும் அவர் கண் இமையின் விளிம்பான வாட்டர்லைனில் (waterline) மை இட்டுக்கொள்வார். சில காலத்திற்குப் பிறகு, அவருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதுடன் கண்ணின் உள்ளே உருண்டையாக கட்டி போல ஒன்று இருப்பது போலத் தோன்றியது. இதற்காக வீட்டிலே கை வைத்தியம் செய்து வந்தார்.

ஆனால் ஆறு மாத காலமாகியும் அது குணமாகாத காரணத்தால், கண் மருத்துவரிடம் சென்று, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இந்தக் கட்டி நீக்கப்பட்டது. சிறிது நாட்களுக்குப் பிறகு இதே போல மற்றொரு கண்ணிலும் கட்டி வந்தது.

இந்தப் பிரச்னை தொடர்ச்சியாக வந்ததால், இதைப் பரிசோதனை செய்த சாருலதாவின் கண் மருத்துவர், “உங்களுக்குக் கண்ணில் மை இடும் பழக்கம் உள்ளதா?” என்று கேட்டு, அதனால்தான் அவருக்குக் கண்ணில் கட்டி வருவதாகக் கூறியுள்ளார்.

“இதுவரை எனக்கு மூன்று முறை கண்களில் கட்டிக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளன. கண் மை இட்டுக்கொள்வதை நிறுத்திப் பல ஆண்டுகள் ஆகிறது. அதிலிருந்து இதுபோல கண்களில் கட்டி ஏதும் வரவில்லை” என்று சாருலதா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

By admin