• Sat. Jul 12th, 2025

24×7 Live News

Apdin News

‘கதை படித்தால் காசு வரும்’ – பெண்களை குறிவைத்து ஏமாற்றிய Look App மோசடி நடந்தது எப்படி?

Byadmin

Jul 11, 2025


கொடைக்கானல், பெண்கள், 'LookApp' மோசடி, புத்தகங்கள், தமிழ்நாடு
படக்குறிப்பு, ரோஸ்லின் மேரி (வலதுபுறம்), லுக் செயலி மூலம் சுமார் 2 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார்.

‘இருபதாயிரம் ரூபாய் செலுத்தி செயலியில் (App) கதை படித்தால் தினமும் 700 ரூபாய் பெறலாம்’ எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக, தனியார் நிறுவனம் மீது திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்துள்ளனர்.

“அவர்கள் யாரையும் நேரில் பார்த்தது இல்லை. வாட்ஸ்ஆப் உரையாடல் மூலம் மட்டுமே மொத்த பணத்தையும் ஏமாற்றிவிட்டனர்” எனக் கூறுகின்றனர், கொடைக்கானல் பகுதி மக்கள்.

புத்தகம் படித்தாலே பணம் வருமா? மோசடி நடந்தது எப்படி?

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரோஸ்லின் மேரி. இவருக்கு உறவினர் ஒருவர் மூலம் லுக் கல்ச்சர் மீடியா (Look Culture Media) என்ற செயலியின் அறிமுகம் கிடைத்துள்ளது.

By admin