• Fri. Sep 20th, 2024

24×7 Live News

Apdin News

கனடா மாணவர் விசாவில் புதிய மாற்றங்களை அறிவித்த ஜஸ்டின் ட்ரூடோ – மாணவர்களுக்கு மேலும் சிக்கல் ஏற்படுமா?

Byadmin

Sep 19, 2024


இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கனடாவுக்கே சென்று படிக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கனடாவுக்கே சென்று படிக்கின்றனர். (கோப்புக்காட்சி)

வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களின் முக்கிய பிரச்னையான மாணவர் விசா குறித்த ஓர் அறிவிப்பை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ளார்.

ட்ரூடோ தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவின் மூலம் இந்த அறிவிப்பைப் பற்றி தெரிவித்தார். அடுத்த ஆண்டு, வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கையை இன்னும் குறைக்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.

“இந்த ஆண்டு, 35 சதவிகிதத்திற்கும் குறைவாகவே வெளிநாட்டு மாணவர்களுக்கு நாங்கள் விசா வழங்கியுள்ளோம். அடுத்த ஆண்டு, இந்த எண்ணிக்கை மேலும் 10 சதவிகிதம் குறைக்கப்படும்.”

“குடியேற்றம் நமது பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும், ஆனால் இந்த திட்டத்தை தவறான விதத்தில் பயன்படுத்தி மாணவர்களை தனக்கு சாதகமாக பயன்படுத்துபவர்களின் மீது நடவடிக்கை எடுப்போம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

By admin